வழி காட்டாத பலகைகள்; விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள் - பள்ளிபாளையத்தில் பரிதாபம்

வழி காட்டாத பலகைகள்; விழி பிதுங்கும் வாகன ஓட்டிகள் - பள்ளிபாளையத்தில் பரிதாபம்
X

பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் பிரிவு சாலைக்கு வழிகாட்டும் பலகை கீழே சரிந்து கிடக்கிறது.

பள்ளிபாளையம் தனியார் சர்க்கரை ஆலை வழிகாட்டி பலகை சேதமடைந்ததால், அங்கு வரும் வெளியூர்வாசிகள், திக்கு தெரியாமல் திண்டாடும் சூழல் உள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப்பகுதியில் இருந்து, காவேரி ஆர்.எஸ். பிரதான சாலை ஓடப்பள்ளி, காவேரி ஆர்.எஸ்.பகுதிகளில் தனியார் சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த சக்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு வரும் கரும்பு லாரிகள், காவேரி ஆர்.எஸ்.வழியே சென்று வருகின்றன.

சர்க்கரை ஆலைக்கு, பள்ளிபாளையம் பிரிவு சாலையில் இருந்து ஆலைக்கு வழிகாட்டும் திசைகாட்டி பலகை, மண் அரிப்பின் காரணமாக, கீழே சரிந்துள்ளது. இதனால், புதிதாக அப்பகுதிக்கு வரும் வெளியூர் வாகன ஓட்டிகள், தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு செல்வர்களும், சரியான திசை தெரியாமல் தடுமாறுகின்றனர். வழி தெரியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, அதிகப்படியான கரும்பு பாரத்துடன் வரும் வாகன ஓட்டிகள், சரியான திசை தெரியாமல் தவறான சாலைகளில் சென்று , மீண்டும் திரும்பி இப்பகுதிக்கு வருவதற்குள், அடிக்கடி அப்பகுதியில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. எனவே, உடனடியாக இங்குள்ள திசைகாட்டி பலகைகளை சீரமைத்து தர, வெளியூர் வாகன ஓட்டிகளின் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி