மோட்டார் வாகன ஆய்வாளர் வாகன சோதனையில் சிக்கிய வாகனங்கள்

மோட்டார் வாகன ஆய்வாளர் வாகன சோதனையில் சிக்கிய வாகனங்கள்
X

குமாரபாளையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டு வரி செலுத்தாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையத்தில் மோட்டார் வாகன அதிகாரியால் வாகன சோதனை நடத்தப்பட்டு வரி செலுத்தாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும், விதி மீறிய வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் மோட்டார் வாகன அதிகாரியால் வாகன சோதனை நடத்தப்பட்டு வரி செலுத்தாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும், விதி மீறிய வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் குமாரபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் வாகன சோதனை செய்தார். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்தது, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அபராதம் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் கூறியதாவது:

75 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 15 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அபராத தொகை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய், வரியாக 43 ஆயிரத்து 250 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. வரி செலுத்தாத ஒரு ஆம்னி வேன், ஒரு ஆம்னி பஸ், ஒரு சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, குமாரபாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் அதிக பாரம் ஏற்றிய 3 வாகனங்கள் உள்ளடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture