குமாரபாளையம் நகராட்சியில் கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிப்பு

குமாரபாளையம் நகராட்சியில் கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிப்பு
X

குமார பாளையம் நகராட்சியில் கொசுவை ஒழிக்க புகைமருந்து அடிக்கப்பட்டது.

கொசு பரவாமல் தடுக்க குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் புகை மருந்து அடிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளைதயத்தில் கடந்த சில நாட்களாக மழை வந்ததால் கொசு தொல்லை அதிகமானது. இதனால் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் உத்தரவின் பேரில் நகரின் 33 வார்டு பகுதியிலும் கிருமிநாசினி புகை அடிக்கப்பட்டது. அந்தந்த வார்டு மேஸ்திரிகள் கொசு மருந்து அடிக்கும் பணியை கண்காணித்தனர். பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த தண்ணீர் பாத்திரங்களில் மருந்து ஊற்றியும், பழைய டயர்கள், ஓடுகள், தேங்காய் சிரட்டைகள் அகற்றப்பட்டன. தொற்று நோய் பரவாமல் தடுப்பது எப்படி? என்பது பற்றிய துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!