படைவீடு பேரூராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வீச்சரிவாளுடன் ரகளை: பொதுமக்கள் பீதி

படைவீடு பேரூராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வீச்சரிவாளுடன் ரகளை: பொதுமக்கள் பீதி
X

பைல் படம்.

படைவீடு பேரூராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

குமாரபாளையம் அடுத்த படைவீடு பேரூராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து படைவீடு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பெருமாள் கூறுகையில், குமாரபாளையம் தாலுக்கா, படைவீடு பேரூராட்சி, கவுண்டனூர் அருந்திய தெருவில் நேற்று மாலை 7 மணியளவில் 50க்கும் மேற்பட்டோர் வீச்சரிவாள் கத்தியுடன் வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற நிலைமை உருவாகி பீதி அடைந்துள்ளனர். எனவே, சட்டம் ஒழுங்கை பராமரிக்க சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை நிர்வாகமும், வட்டாட்சியர், கோட்டாட்சியர், காவல்துறையின் உயர் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி உள்ளிட்டோர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி