வெறிநாய் கடித்து 10க்கும் மேற்பட்டோர் காயம்..!

வெறி நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தை.
குமாரபாளையத்தில் நாய்கள் அதிகம் தொல்லை தருவதாக நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் கூறியதால் , சில நாட்களுக்கு முன் தொடர்ந்து மூன்று நாட்கள் நாய்கள் பிடிக்கப்பட்டு, அவைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இன்னும் பல இடங்களில் நாய்கள் அதிகம் தொல்லை கொடுத்து கொண்டுதான் உள்ளது. நேற்று இரவு 7:00 மணியளவில் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சாலையில் போவோர், வருவோர்களை கடித்து வந்தது. இதில் சிறுவர், சிறுமிகள், பெரியோர்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து நகராட்சி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு, அந்த நாய் பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:
வெறிநாய் கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன், அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்கள் அனுப்பி வைத்து, அந்த நாய் பிடிக்கப்பட்டது. நகரில் உள்ள நாய்களுக்கு எல்லாம் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவைகளால் எவ்வித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படாது. இந்த நாய் எங்கோ வெளியில் இருந்து புதிதாக வந்துள்ளது. அதனை பிடித்து விட்டோம். அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.ஹெச்.ல் அனுமதிக்கப்பட்டவர்களை தி.மு.க. நகர செயலர் செல்வம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள்.
ஏற்கனவே பலமுறை குமாரபாளையத்தில் தெருநாய்கள் தோலை கொடுத்து வருவது குறித்து நமது தளத்தில் செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த செய்தியிலும் தெருநாய்களை பிடிப்பது கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்வது குறித்தும் பதிவிட்டிருந்தோம்.
ஆனால் அதையும் மீறி தற்போது வெறிநாய் பத்துக்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது. மீண்டும் இடாகிப்போன்ற சமபாவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்வது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ததாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu