பிரதமராக மோடி பதவி ஏற்பு: குமாரபாளையம் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

பிரதமராக மோடி பதவி ஏற்பு: குமாரபாளையம்   பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
X

பிரதமராக மோடி பதவியேற்றதை தொடர்ந்து குமாரபாளையம் பா.ஜ.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்திய பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு குமாரபாளையம் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்திய பிரதமராக மோடி பதவியேற்றதை தொடர்ந்து குமாரபாளையம் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தியா முழுதும் ஏழு கட்டங்களாக ஏப். 19ல் தொடங்கிய தேர்தல் ஜூன் மாதம் முதல் தேதி முடிவடைந்தது. தமிழகத்தை பொறுத்தவரை முதல் கட்டமாக ஏப் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. அனைத்து தொகுதியிலும் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இந்தியா முழுவதும் 64 கோடி பேர் வாக்களித்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அளித்த பேட்டியில் பெருமையாக கூறினார். உலக அளவில் மிகப்பெரிய சாதனையாகும் எனவும் கூறியிருந்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் ௪ம் தேதி எண்ணி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இந்திய பிரதமராக மீண்டும் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக குமாரபாளையம் பா.ஜ.க.. சார்பில் ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு பகுதிகளில், மாவட்ட விளையாட்டுத்துறை தலைவர் நாகராஜ் தலைமையில், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.அப்போது நரேந்திர மோடி வாழ்க, பா.ஜ.க. வாழ்க, என கோஷமிட்டனர். தரவு மேலாண்மை மாவட்ட துணை தலைவர் விவேக்பாலாஜி, மாநில ஓ.பி.சி. அணி செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணி, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட செயலர் கோவிந்தராஜ், நகர தலைவர் சேகர், நகர துணை தலைவர் சீனிவாசன், நகர பொது செயலர்கள் மணிகண்டன், கலைராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags

Next Story
ai based agriculture in india