மநீம மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு

மநீம மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில்,  மின் கம்பங்களில் விளக்குகள் அமைக்கக்கோரி, மனு கொடுக்கப்பட்டது.

--

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி, 3வது வார்டு போலீஸ்காரர் லைன் வீதி, கிழக்கு காவேரி நகர், ராஜராஜன் நகர் பகுதி உள்ளிட்டவை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்குள்ள மின் கம்பங்களில், பல மாதங்களாக மின் விளக்கு அமைக்கப்படாததால் இரவில் இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதோடு, விஷமிகள், சமூக விரோதிகளால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

இது குறித்து, மக்கள் நீதிமய்யம் கட்சி மாநில மகளிரணி தலைவி மூகாம்பிகாவிடம், நகர மகளிரணி நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். மூகாம்பிகாவின் அறிவுறுத்தல்படியும், மாவட்ட செயலர் காமராஜ் வழிகாட்டுதல்படியும், மக்கள் நீதிமய்யம் கட்சியின் நகர மகளிரணி செயலர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் ரேவதி, உஷா, சுஜாதா, விஜயகுமார், சரவணன், யோகராஜ், கார்த்திக் ஆகியோர், குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சசிகலாவிடம், மின் விளக்குகள் அமைத்து தர வேண்டி மனு கொடுத்தனர். இது பற்றி பரிசீலித்து மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கமிஷனர் சசிகலா தெரிவித்தார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்