மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மின் வாரியத்தில் மனு

மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மின் வாரியத்தில் மனு
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில்,  மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசனிடம் மின் ஓயர்களை அகற்றக்கோரி மனு கொடுக்கப்பட்டது.

இடையூறாக உள்ள ஒயர்களை அகற்றக்கோரி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், மின் வாரியத்தில் மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில் எதிரில், திருவள்ளுவர் வீதி, எல்.வி.பி. சந்து பகுதியில் புதைவட மின் ஒயர்கள் அதிக அளவில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இதனால், வீதியில் நடந்து செல்பவர்கள், டூவீலரில் செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. அதுமட்டுமின்றி, விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இது குறித்து, குமாரபாளையம் பகுதி மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், நகர செயலர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் ரேவதி, உஷா ஆகியோர், மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட உதவி இயக்குனர், மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்