ம.நீ.ம. சேலம் மண்டல செயலருக்கு கட்சியினர் வாழ்த்து

ம.நீ.ம. சேலம் மண்டல செயலருக்கு கட்சியினர் வாழ்த்து
X
ம.நீ.ம. சேலம் மண்டல செயலருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

ம.நீ.ம. சேலம் மண்டல செயலருக்கு கட்சியினர் வாழ்த்து

ம.நீ.ம. சேலம் மண்டல செயலருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யம் நாமக்கல் மாவட்ட செயலராக குமாரபாளையம் காமராஜ் பணியாற்றி வந்தார். இவரை கட்சியின் நிறுவனர் கமலஹாசன், மாவட்ட செயலர் பொறுப்பிலிருந்து விடுவித்து, சேலம் மண்டல செயலராக நியமனம் செய்துள்ளார். இவருக்கு மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் பலரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து காமராஜ் கூறியதாவது:

கமலஹாசன் ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்து பல சேவைகள் செய்துள்ளேன். கட்சியில் சேர்ந்து எனக்கு கொடுத்த பணியினை சிறப்பாக செய்து முடித்ததால், மாவட்ட செயலராக நியமனம் செய்யப்பட்டேன். தற்போது சேலம் மண்டல செயராக கட்சியின் நிறுவனர் கமலஹாசன் நியமனம் செய்துள்ளார். அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு உண்மையுடன் கட்சியின் வளர்சிக்கு பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!