மக்கள் நீதி மய்யம் சார்பில் பேரிடர் விழிப்புணர்வு பிரச்சாரம்

மக்கள் நீதி மய்யம் சார்பில் பேரிடர் விழிப்புணர்வு பிரச்சாரம்
X

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகித்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

குமாரபாளையத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பேரிடர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குமாரபாளையம் பகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பிரச்சாரம், மாவட்ட செயலர் காமராஜ் ஆலோசனையின்படி, மாவட்ட துணைச்செயலர் சிவகுமார், நகர செயலர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இது சம்பந்தமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

வடிகால் மற்றும் அதன் அருகாமையில் குப்பைகளை கொட்டக்கூடாது; குழந்தைகளை மின் கம்பங்கள் அருகில் விளையாடவோ, அமர்வதோ, தொடும்படியாகவோ அனுமதிக்காதீர்கள்; வீட்டில் மின் சாதனங்களை ஈரக்கையால் பயன்படுத்தாதீர்கள்; காவிரியில் வெள்ளம் வந்து கொண்டு இருப்பதால், அங்கு சென்று துணி துவைப்பதோ, குளிப்பதோ கூடாது.

அவசர உதவிக்கு மின்சார வாரியம் - 04288 260185, நகராட்சி அலுவலகம் 04288 261733, தீயணைப்பு நிலையம் ‪04288 26210-1‬. ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு பிரசாரத்தில், மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, ரேவதி, உஷா, மற்றும் வார்டு நிர்வாகிகள், கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மற்றும் கட்சியின் கொள்கை விளக்க துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்