திருநங்கைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ

திருநங்கைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ
X

அரிசி, மளிகை பொருட்கள் வழங்கும் எம்எல்ஏ தங்கமணி.

திருநங்கைகள் மற்றும் சினிமா தியேட்டர் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருள் தொகுப்புகளை எம்எல்ஏ தங்கமணி வழங்கினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முன் களப்பணியாளர்களான நகராட்சி துப்புரவு பணியாளர்கள், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், ஜி.எச்.டாக்டர்கள், செவிலியர்கள், பார்மசிஸ்ட், போலீசார் உள்ளிட்டவர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரிசி, மளிகை பொருள் அடங்கிய தொகுப்பு 520 நபர்களுக்கு எம்.எல்.ஏ. தங்கமணி சில நாட்கள் முன்பு வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக திருநங்கைகள் மற்றும் சினிமா தியேட்டர் பணியாளர்களுக்கு, அரிசி, மளிகை பொருள் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு அதிமுக தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் நகர செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 50 திருநங்கைகள், சினிமா தியேட்டர் பணியாளர்கள் 45 பேர்கள் ஆக மொத்தம் 95 பேருக்கு அரிசி, மளிகை பொருள் அடங்கிய தொகுப்புகளை எம்எல்ஏ தங்கமணி வழங்கினார்.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!