காணாமல் போன மூதாட்டியை குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த அட்சயம் பொதுநல அமைப்பினர்

காணாமல்  போன மூதாட்டியை குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த அட்சயம் பொதுநல அமைப்பினர்
X

குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி, அட்சயம் நிறுவனர் நவீன்குமார், முன்னிலையில் பவளாயி அவரது குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்டார்

குமாரபாளையத்தில் காணமல் போன மூதாட்டியை குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த அட்சயம் பொதுநல அமைப்பினர்

குமாரபாளையம், பெருமாபாளையம் பகுதியில் வசிக்கும் தனது மகள் சாந்தியுடன் பவளாயி என்பவர் வசித்து வந்தார். டிச. 28ல் பவளாயி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போனதாக குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், ஆதரவற்ற மன நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ஆதரவு வழங்க கேட்டுக்கொண்டதற்கிணங்க, அங்கு நேரில் சென்று பவளாயியை அட்சயம் அமைப்பினர் தங்கள் அதரவற்றோர் மையத்திற்கு அழைத்து வந்தனர்.

மூதாட்டி காணாமல் போனது குறித்து சமூக வலைதளங்களில் குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி அனுப்பிய விளம்பரத்தை பார்த்து, அட்சயம் சார்பில் அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குமாரபாளையம் எஸ்.ஐ. மலர்விழி, அட்சயம் நிறுவனர் நவீன்குமார், முன்னிலையில் பவளாயி அவரது குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்டார்.

Tags

Next Story