காணாமல் போன கன்றுக்குட்டி: உரிமையாளரை தேடி ஒப்படைத்த சுயேட்சை வேட்பாளர்

காணாமல் போன கன்றுக்குட்டி: உரிமையாளரை தேடி ஒப்படைத்த சுயேட்சை வேட்பாளர்
X

குமாரபாளையத்தில் காணாமல் போன கன்றுடன் அதன் உரிமையாளர் பிரகாஷ்.

குமாரபாளையத்தில் பசுவின் கன்றினை உரிமையாளரை தேடி சுயேச்சை வேட்பாளர் ஒப்படைத்தார்.

குமாரபாளையத்தில் பசுவின் கன்றினை உரிமையாளரை தேடி சுயேச்சை வேட்பாளர் ஒப்படைத்தார்.

குமாரபாளையம் 11வது வார்டில் முன்னாள் ம.தி.மு.க. செயலர் விஸ்வநாதன் சுயேச்சையாக வைரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு பிரச்சாரம் முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சில நாய்கள் பசு கன்று ஒன்றினை கடிக்க சூழ்ந்து குலைத்துக் கொண்டிருந்தது. இதனை கண்ட விஸ்வநாதன் நாய்களை விரட்டி விட்டு, தன் வீட்டிற்கு கன்றினை அழைத்து சென்றார்.

இது குறித்து குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் கொடுத்து, கன்று தேடி யாரவது வந்தால் தன்னிடம் உள்ளது என்பதை சொல்லி வந்தார். இது தவிர மொபைல் போன் மூலமும் தகவல் பரிமாற்றம் செய்தார். இதனை கண்ட குமாரபாளையம் அபெக்ஸ் காலனியை சேர்ந்த பிரகாஷ், 27, நேரில் வந்து, இரு நாட்கள் முன்பாக இரண்டு கன்றுகள் வாங்கியதாகவும், இந்த கன்று கையிற்றை அவிழ்த்துக்கொண்டு வந்து விட்டது என்றும் கூறினார்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்து கன்றினை உரிமையாளரிடம் விஸ்வநாதன் ஒப்படைத்தார். கன்றின் உரிமையாளர்களான பிரகாஷ், பெற்றோர்கள் அண்ணாதுரை, சாந்தி நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!