குமாரபாளையத்தில் 70 அடியில் நவீன கொடி கம்பம்: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைப்பு
பள்ளிபாளையம் சாலை கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே 70 அடியில் மின்சாரத்தில் இயங்கும் நவீன கொடிக்கம்பத்தை துவக்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன்.
குமாரபாளையம் தி.மு.க. முன்னாள் மாவட்ட துணை செயலரும் முன்னாள் நகர் மன்ற தலைவருமான முன்னாள் நகர செயலர் சேகரின் 62வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி பள்ளிபாளையம் சாலை கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே 70 அடியில் மின்சாரத்தில் இயங்கும் நவீன கொடிக்கம்பம் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் அமைக்கப்பட்டது.
இதன் துவக்க விழா மாவட்ட செயலர் மூர்த்தி, நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றுபுதிய கொடிக்கம்பத்தை துவக்கி வைத்தார்.
தினசரி மார்க்கெட் சுமை தூக்குவோர் சங்க துவக்கக் விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தியதுடன், சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார்.
படவிளக்கம் : குமாரபாளையம் தி.மு.க. முன்னாள் மாவட்ட துணை செயலர் சேகரின் 62வது பிறந்த தினத்தையொட்டி கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் அமைக்கப்பட்ட 70 அடியில், மின்சாரத்தில் இயங்கும் நவீன கொடிக்கம்பம் துவக்க விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று கொடியேற்றி வைத்து, புதிய கொடிக்கம்பத்தை துவக்கி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu