குமாரபாளையத்தில் திமுகவினருக்காக அமைச்சர் மதிவேந்தன் தீவிர பிரச்சாரம்

குமாரபாளையத்தில், தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் மதிவேந்தன்.
குமாரபாளையம் நகரமன்ற தேர்தலில், 33 வார்டுகளில் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அந்தந்த கட்சி மூத்த நிர்வாகிகள் -பங்கேற்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதரவாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
குமாரபாளையம் வார்டு மக்களின் வடிகால், குடிநீர் குழாய் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை பெற்றுத்தருவது நகர்மன்ற உறுப்பினர்களின் கடமை. 6 வருடமாக யாராவது இருந்தார்களா? அ.தி.மு.க. ஆட்சியினர் இந்த தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். தோற்றுவிடுவோம் என்று பயந்து உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் விட்டு விட்டார்கள். நம் முதல்வர்தான் இந்த தேர்தலை நடத்துகிறார். அன்று தேர்தல் வைத்திருந்தாலும் தி.மு.க.வினர் வெற்றி பெற்று உங்கள் அடிப்படை வசதிகளை பெற்று தந்திருப்பார்கள்.
பெட்ரோல், பால் விலையை மூன்று ரூபாய் முதல்வர் குறைத்தார். சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 520 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளார். தி.மு.க. அரசை குறை சொல்ல வழியில்லாமல் நகைக்கடனை கையில் எடுத்து பேசி வருகிறார்கள் அ.தி.மு.க.வினர். கவரிங் நகை வைத்து கடன் வாங்கலாமா? இவ்வாறு அவர் பேசினார். நகர பொறுப்பாளர் செல்வம், மூத்த நிர்வாகி மாணிக்கம், அன்பரசு, புவனேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu