பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த முதியவர் மினிடெம்போ மோதி பலி

X
By - K.S.Balakumaran, Reporter |14 Aug 2021 10:00 PM IST
பள்ளிபாளையத்தில் மினி டெம்போ மோதி முதியவர் பலியானார்.
பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 60, தனியார் மில் தொழிலாளி. இவர் நேற்று இரவு 11:00 மணியளவில் ஓட்டமெத்தை பிரிவு பகுதியில் சாலை கடந்த போது, ஈரோட்டிலிருந்து வந்த மினி டெம்போ இவர் மீது மோதியதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 06:00 மணியளவில் இறந்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu