பள்ளிப்பாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிப்பு

பள்ளிப்பாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிப்பு
X

பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிப்பு நிகழ்வில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

பள்ளிபாளையத்தில், அதிமுக சார்பில், எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. பள்ளிபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, ஆவாரங்காடு எம்.ஜி.ஆர்.சிலை வரை நடந்த மவுன ஊர்வலத்திற்கு நகர செயலர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன், மாவட்ட ஊராட்சிக்குழு நிர்வாகி செந்தில், மூத்த நிர்வாகிகள் சுப்ரமணி, சேகர் உள்ளிட்ட பலர், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து, தீபாராதனை காட்டி, மலரஞ்சலி செலுத்தினர். நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!