குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
![குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு குமாரபாளையத்தில் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு](https://www.nativenews.in/h-upload/2021/12/24/1437075-whatsapp-image-2021-12-24-at-105502-am.webp)
வட்ராம்பாளையம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், தேவூர் அருகே காவேரிபட்டி ஊராட்சி வட்ராம்பாளையம் பகுதியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 34 ஆவது ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டது. தேவூர் அருகே காவேரிப்பட்டி ஊராட்சி வட்ராம்பாளையம் பகுதியில் எம்ஜிஆர் சிலைக்கு, சங்ககிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சுந்தர்ராஜன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இதில் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவக்குமாரன், காவேரிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லிராணி முன்னிலையில், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், திரளானோர் கலந்து கொண்டு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu