குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா அ.ம.மு.க.வினர் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா அ.ம.மு.க.வினர் கொண்டாட்டம்
X

குமாரபாளையத்தில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். 105வது பிறந்த நாள் நகர செயலர் அங்கப்பன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர். 105வது பிறந்த நாள் விழா அ.ம.மு.க. சார்பில், கட்சியின் நிறுவனர் தினகரன் உத்திரவின் பேரில் கொண்டாடப்பட்டது. நகர அ.ம.மு.க. செயலர் அங்கப்பன் தலைமை வகித்தார். 33 வார்டுகளிலும் கட்சியின் கொடியேற்றிவைக்கப்பட்டது.

அனைத்து வார்டுகள், அனைத்து வீதிகள் எனும் வகையில் அதிக இடங்களில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது.

நிர்வாகிகள் லோகநாதன், சீனிவாசன், ரமேஷ், வெங்கடேசன், மாணிக்கராஜ், குமாரசாமி, தேவராஜ், அபுபக்கர், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி