பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X

பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கொண்டாடப்பட்டது.

பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கொண்டாடப்பட்டது.

பள்ளிபாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.எல்.ஏ. தங்கமணி தலைமையில் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலைக்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ. தங்கமணி, எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் கொண்டுவந்த போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பள்ளி குழந்தைகளை பிச்சைக்காரர் ஆக்குகிறார் என்றார். அதன் பின் அவர் பதவிக்கு வந்து இரண்டு முட்டைகள் போட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினார்.

பள்ளி குழந்தைகளுக்கு உணவு, புத்தகங்கள், நோட்டுகள், காலணி, பேக், லேப்டாப் ஆகியவற்றை இலவசமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தார். அதன் பின் முதல்வராக வந்த எடப்பாடி பழனிசாமியும் அதனைத் தொடர்ந்து செயல்படுத்தினார். எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்று குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சிகள், ஆலாம்பாளையம், படைவீடு பேரூராட்சிகள் அ.தி.மு.க. கோட்டை என்பதை உறுதி ஏற்போம். தி.மு.க.வினர் பொய் சொல்லி ஆட்சியை பிடித்து, வாக்குறுதியை செயல்படுத்தாமல் விட்டதால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

நிர்வாகிகள் மாவட்ட ஊராட்சி குழு நிர்வாகி செந்தில், நாக அ.தி.மு.க செயலர் வெள்ளிங்கிரி, முன்னாள் நகரமன்ற துணை தலைவர் சுப்ரமணி, நிர்வாகி சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்