குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய அதிமுகவினர்

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய அதிமுகவினர்
X

குமாரபாளையத்தில்,  எம்.ஜி.ஆர். 105வது பிறந்தநாள் விழா, நகர அ.தி.மு.க செயலர் நாகராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவை, அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடினர்.

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர். 105வது பிறந்த நாள் விழா, குமாரபாளையம் பகுதியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், நகர அ.தி.மு.க. செயலர் நாகராஜன் தலைமை வகித்தார். 33 வார்டுகளிலும் கட்சியின் கொடியேற்றிவைக்கப்பட்டது.

அனைத்து வார்டுகள், அனைத்து வீதிகள் எனும் வகையில் அதிக இடங்களில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியினர் மட்டுமில்லாது எம்.ஜி.ஆர். ரசிகர்களும், பொதுமக்களும் இதில் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் திருநாவுக்கரசு, குமணன், பழனிச்சாமி, தனசேகரன், ராஜு, விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்