கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரும் வியாபாரிகள்

குமாரபாளையம் -பவானி பிரதான சாலையில் தங்கள் கடைகளை மாலை 05 க்கு அடைத்த வியாபாரிகள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரும் குமாரபாளையம் வியாபாரிகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பவானி வியாபாரிகள் ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினமும் மாலை 5:00 மணிக்கு வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைக்க நகராட்சி நிர்வாகத்தினர் வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கூறியிருந்தனர்.
அதன்படி, அனைத்து வியாபாரிகளும் தினமும் மாலை 05:00 மணிக்கு யாரும் சொல்லாமலேயே தானாக முன்வந்து தங்கள் கடைகளை அடைத்து வருகின்றனர்.
இது பற்றி நகராட்சி கமிஷனர் லீலா சைமன் கூறியதாவது:மாலை 05:00 மணிக்கு மேல் கடையை திறந்து வைத்திருக்கும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தோம். குறிப்பிட்ட நேரத்திற்கு வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்து மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu