மனைவி, குழந்தை பிரிந்த ஏக்கத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை

மனைவி, குழந்தை பிரிந்த ஏக்கத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் மனைவி, குழந்தை பிரிந்த ஏக்கத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் நரேஷ்குமார்,34. கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி, 23. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. 5 வருடங்களுக்கு முன் திருமணம் ஆகியது. 3 வருடங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ராணி, ஆவத்திபாளையத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

தன் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் தார்சு கம்பியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து இவரை மீட்டு குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அழைத்து சென்றபோது, பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளார்.

இது குறித்து குமாரபாளையம் எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
ai solutions for small business