குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி ஆண்களுக்கான வாலிபால் போட்டி

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி ஆண்களுக்கான வாலிபால் போட்டி
X

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி பவர் பாய்ஸ் சார்பில் வாலிபால் போட்டி நடைபெற்றது. பெண்கள் கபாடி போட்டியில் நடைபெற்றது.

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி பவர் பாய்ஸ் சார்பில் ஆண்களுக்கான வாலிபால் போட்டி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் மாசித் திருவிழாவையொட்டி சுப்பிரமணி நினைவாக பவர் பாய்ஸ் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டி சங்க தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இன்று காலை துவங்கிய இந்த போட்டி பகல், இரவாக நடைபெறவுள்ளது. இதற்கான பரிசளிப்பு விழா இறுதி போட்டியின் முடிவில் வழங்கப்படும். இந்த பரிசளிப்பு விழாவில் நடிகர் பம்பாய் சுப்பிரமணி பங்கேற்க உள்ளார்.

இதில் சங்க துணை தலைவர் செந்தில்குமார், செயலர் கார்த்திகேயன், துணை செயலர் தாமோதரன், பொருளர் சுந்தரமூர்த்தி உள்பட பலரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
ai and business intelligence