வாகனங்களை மேம்பாலத்தில் விட பொதுமக்கள் கோரிக்கை

வாகனங்களை மேம்பாலத்தில் விட   பொதுமக்கள் கோரிக்கை
X
குமாரபாளையம் அருகே வாகனங்களை மேம்பாலத்தில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகனங்களை மேம்பாலத்தில் விட

பொதுமக்கள் கோரிக்கை


குமாரபாளையம் அருகே வாகனங்களை மேம்பாலத்தில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு புறவழிச்சாலை பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் துவங்கி, வாகனங்கள் எல்லாம் 2023, டிச. 8, முதல் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டது. தற்போது பாலம் பணிகள் நிறைவு பெற்று, சில நாட்கள் வெள்ளோட்டமும் விடப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் பாலத்தின் மீது சென்று வந்தன. சில நாட்களாக, மீண்டும் அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, தட்டான்குட்டை, சத்யா நகர், வேமன்காட்டுவலசு, கதிரவன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சர்வீஸ் சாலையில், எதிர் திசையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்று வந்தனர். வேமன்காட்டுவலசு பகுதியில் உள்ள அரசு தொடக்க மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, இரண்டு ஆண்டு காலமாக, மாணவ, மாணவியர், மிகுந்த அச்சத்துடன் தான் வந்து கொண்டிருந்தனர். பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, வாகனங்கள் புதிய மேம்பாலம் வழியாக திருப்பி விட்ட பின், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் மீண்டும் வாகனங்கள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் அச்சமில்லாமல் சர்வீஸ் சாலைகளில் செல்ல, மேம்பாலம் வழியாக அனைத்து வாகனங்களை திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் அருகே வாகனங்களை மேம்பாலத்தில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
Similar Posts
பொதுமக்களுக்கு பயனளித்து வரும்   நில முகவர் சங்க நீர் மோர் பந்தல்
வாகனங்களை மேம்பாலத்தில் விட   பொதுமக்கள் கோரிக்கை
பயன்படுத்த முடியாத நிலையில் காவிரி படித்துறை   சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சேலத்தில் பாஜகவின் நீர்-மோர் பந்தல்
பயன்படுத்த முடியாத நிலையில் காவிரி படித்துறை   சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சேலம் நீச்சல் முகாமில் 62 பேருக்கு சான்றிதழ்
பார்வையைத் தாண்டி வெற்றி – சேலத்தின் ‘கனா ஒலிம்பிக்ஸ் 2025
இரும்பு கிடங்கில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து
வெற்றிலை கருகுதலை தடுக்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
லாரி மோதி, காரில் சென்ற அரசு ஊழியர் பலி
சேலத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
ஓமலூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ₹50K உதவி
திடீர் கனமழையால் குளிர்ந்த சேலம்