குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம்.
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், கொரோனா காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்குதல், ரத்த தான முகாம், முழு உடல் தானம் வழங்கும் முகாம், கல்வி உதவி தொகை வழங்குதல் உள்ளிட்ட பல சேவைப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா தடுப்பூசி ஒவ்வொருவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் 33 வார்டுகளில் வீடு வீடாக நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
மகளிர் அணி நிர்வாகிகள் சித்ரா, ரேவதி, உஷா உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மற்றும் கட்சியின் கொள்கை விளக்க துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர். நகர செயலர் சரவணன் உறுபினர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu