குமாரபாளையத்தில் மெகா தூய்மை பணிகள்: நகராட்சி கமிஷனர் துவக்கிவைப்பு

குமாரபாளையத்தில் மெகா தூய்மை பணிகள்: நகராட்சி கமிஷனர் துவக்கிவைப்பு
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற மெகா தூய்மை பணிகளை பார்வையிட்ட நகராட்சி கமிஷனர் ஸ்டாலின்பாபு.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் மெகா தூய்மை பணிகளை கமிஷனர் ஸ்டாலின்பாபு இன்று துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் உத்திரவின்படி, மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதல் படி செப்டம்பர் 20 முதல் 25 வரை மாநிலம் முழுவதும் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை 5 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி குமாரபாளையம் நகராட்சி சார்பில் வடிகால்கள் தூர்வாரும் பணிகளை நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். முதல் நாளான இன்று அபெக்ஸ் காலனி, பாரதி நகர், கோம்பு பள்ளம், உடையார்பேட்டை கோம்பு பள்ளம் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்றது.

இது குறித்த நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறுகையில், தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி மெகா தூய்மை பணிகள் துவங்கி வைக்கப்பட்டது. இந்த பணிகள் செப்டம்பர் 25ம் தேதி வரை நகரின் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்பட்டு தூய்மையான நகராட்சியாக பராமரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதில்எஸ்.ஒ. ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!