குமாரபாளையத்தில் மருத்துவ கல்லூரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் மருத்துவ கல்லூரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை
X
குமாரபாளையத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவி மாயமானார்.

குமாரபாளையத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவி மாயமானார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் வசிப்பவர் ஸ்வேதா, 22. குமாரபாளையம் பல் மருத்துவ கல்லூரியில் 4 ஆண்டுகள் பட்டப்படிப்பு படித்து விட்டு, பயிற்சி பெற்று வருகிறார். கல்லூரியில் தங்காமல், வட்டமலை பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கி படித்து வருகிறார். இவருக்கு இவரது தந்தை ராஜன், 54, கடந்த மார்ச் 30ம் தேதி மாலை 6 மணிக்கு போன் செய்த போது, மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இது குறித்து நேரில் வந்த தந்தை ராஜன் குமாரபாளையம் போலீசில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி