குமாரபாளையத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவப்பரிசோதனை

குமாரபாளையத்தில், துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், காசநோய் பிரிவு மாவட்ட உதவி இயக்குனர் டாக்டர் கணபதி வழிகாட்டுதல்படி, குமாரபாளையம் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் பிரபாகரன் மற்றும் மருத்துவக்குழுவினர், பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். மாவட்ட காசநோய் பிரிவு நலகல்வியாளர் இராமச்சந்திரன், காசநோய் வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.

இந்த முகாமில் 126 பணியாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இதில் டாக்டர் கிருத்திகா, சுகாதாரத்துறையினர் கார்த்திகேயன், அருள்மணி, முரளிதரன், உள்பட பலர் பங்கேற்றனர். இம்முகாமினை, சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், சவுந்தரராஜன் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!