குமாரபாளையத்தில் பிரதமர் பிறந்தநாள் விழாவையொட்டி மருத்துவ முகாம்

குமாரபாளையத்தில் பிரதமர் பிறந்தநாள் விழாவையொட்டி மருத்துவ முகாம்
X

பிரதமர் பிறந்தநாள் விழாவையொட்டி குமாரபாளையத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பிரதமர் பிறந்தநாள் விழாவையொட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது.

பாரத பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் விழாவையொட்டி குமாரபாளையத்தில் பா.ஜ.க. மருத்துவ பிரிவு சார்பில் மாவட்ட துணை தலைவர் தினேஷ்குமார் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை தலைவர் துரைசாமி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி பங்கேற்றனர். புற்றுநோய், நுரையீரல், எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, கண் சிகிச்சை, பல் சிகிச்சை உள்ளிட்ட பல மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.

Tags

Next Story
ai healthcare technology