குமாரபாளயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

குமாரபாளயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
X

ஆடி அமாவாசையை முன்னிட்டு வெறிச்சோடிய இறைச்சி கடைகள்.

ஆடி அமாவாசை முன்னிட்டு நேற்று குமாரபாளையத்தில் உள்ள இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்களாக இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இறைச்சி கடையினர் வாழ்வாதாரம் இல்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். சில தளர்வுகளுடன் இறைச்சி கடைகள் மீண்டும் செயல்பட்டன.

நேற்று ஆடி அமாவாசை என்பதால் ஆட்டிறைச்சி, கோழி, மீன் இறைச்சி வாங்க பொதுமக்கள் வராததால் குமாரபாளையத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோடியது.

இதனால் குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இறைச்சி வியாபாரிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி