குமாரபாளையத்தில் திருவிழா பூச்சாட்டுதலால் வெறிச்சோடிய இறைச்சிக் கடைகள்
குமாரபாளையத்தில் காளியம்மன், மாரியம்மன் திருவிழா வருவதால் இறைச்சி கடைகளில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மாசித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அனைத்து சமூக காளியம்மன், மாரியம்மன் கோவில்களிலும் மாசித் திருவிழா நடைபெறவுள்ளது. காளியம்மன் கோவிலில் பிப். 22-ல் பூச்சாட்டு நடைபெற்ற நிலையில், தற்போது மாரியம்மன் கோவில்களில் மார்ச் 1ம் தேதி பூச்சாட்டுதல் விழா நடைபெறவுள்ளது.
மகா குண்டம் இறங்கும் பக்தர்கள், அலகு குத்துதல், அக்னி கரகம் எடுத்தல் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற்றிட பிப்.22 முதல் மஞ்சள் ஆடை அணிந்து 15 நாட்கள் விரதமிருப்பார்கள். ஆண்டுதோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா குண்டம் இறங்குவார்கள்.
இந்நிலையில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் துவங்கியுள்ளதால், நேற்று ஆட்டிறைச்சி, கோழி, மீன் கடைகளில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இறைச்சி கடையினர் வியாபாரம் இல்லாமல் அதிருப்தியடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu