இறைச்சி கடைகள் மூடல் - கோழி பிடிக்க கிராமங்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

இறைச்சி கடைகள் மூடல் - கோழி பிடிக்க கிராமங்களுக்கு படையெடுக்கும் மக்கள்!
X

இறைச்சிக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கிராமங்களுக்கு சென்று கோழி வாங்கும் மக்கள்.

இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளதால், அசைவப் பிரியர்கள் இறைச்சிக்காக கிராமப்புறங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் முழுவதும் அனைத்து நாட்களிலும் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அசைவப் பிரியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பல அசைவப் பிரியர்கள், இதற்கு தீர்வாக, அருகிலுள்ள கிராமப்புறங்களுக்கு படையெடுத்து வருகின்றனர் அங்கு விவசாயத் தோட்டங்களில் வளர்க்கபப்டும் இறைச்சிக் கோழிகளை நேரடியாக வாங்கி, சுத்தம் செய்து வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து, இறைச்சி வாங்கிய சிலர் கூறுகையில், ஊரடங்கு என்பதால் இறைச்சிக்கடைகள் இயங்குவதில்லை அப்படி மீறி திறந்தாலும், கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து விடுகின்றனர். அதனால் கடைகளில் யாரும் கோழிகள் வாங்கி வைப்பதில்லை.

எனவே, நாங்கள் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில், விவசாயக்காட்டில் வளர்க்கப்படும் கோழிகளின் நேரடியாக வாங்குகிறோம். இதனால் விலை குறைவாக கோழிகள் கிடைப்பதுடன், நல்ல ருசியானதாக இருக்கின்றன. கடைகள் திறக்கும் வரை கிராமப்புறங்களில் வளரும் கோழிகளை வாங்குவோம் என்றனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!