புரட்டாசி எதிரொலி: குமாரபாளையத்தில் 'காற்று வாங்கிய' இறைச்சி கடைகள்

புரட்டாசி எதிரொலி: குமாரபாளையத்தில் காற்று வாங்கிய இறைச்சி கடைகள்
X

புரட்டாசி மாதம் என்பதால்,  இறைச்சி வாங்க பொதுமக்கள் வராமல், குமாரபாளையத்தில் இறைச்சி கடைகள் வெறிச்சோடி இருந்தன.

புரட்டாசி மாதம் என்பதால், பொதுமக்கள் வருகை குறைந்து, குமாரபாளையத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பல மாதங்களாக இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இறைச்சி கடையினர் வாழ்வாதாரம் இல்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வந்தனர்.

அதை தொடர்ந்து, சில தளர்வுகளுடன் இறைச்சி கடைகள் மீண்டும் செயல்பட தமிழக அரசு அனுமதி தந்தது. இதனால், வியாபாரிகள் நிம்மதி அடைந்தனர். இதனிடையே, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் அசைவம் சாப்பிடுவதை, பொதுமக்கள் பலரும் தவிர்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக, ஆட்டிறைச்சி, கோழி, மீன் இறைச்சி வாங்க பொதுமக்கள் வராததால் குமாரபாளையத்தில் இறைச்சி கடைகள், இன்று வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட இறைச்சி வியாபாரிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா