குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மழை நீர் தேங்காதிருக்க நடவடிக்கை
X
குமாரபாளையம் காளியம்மன் கோவில் மைதானத்தில் மழை நீர் தேங்காதிருக்க நகராட்சியினரால் அமைக்கப்பட்டுள்ள குழாய்.
By - K.S.Balakumaran, Reporter |5 Oct 2021 9:30 PM IST
குமாரபாளையம் காளியம்மன் கோவில் மைதானத்தில் மழை நீர் தேங்காதிருக்க நகராட்சியினர் குழாய் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குமாரபாளையம் தி.மு.க. சார்பில் நகர இளைஞரணி செல்வராஜ், நகராட்சி கமிஷனரிடம் 3 கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார். அதன்படி காளியம்மன் கோவில் மைதானத்தில் மழைநீர் தேங்காதிருக்க வடிகாலில் தண்ணீர் சேரும்படியாக குழாய் அமைக்கப்பட்டது.
26வது வார்டில் கழிவுநீர் கால்வாய்க்கு மேடை அமைத்து தர கேட்டுக்கொண்டதன்படி, பணிகள் செய்து தரப்பட்டது. பள்ளிபாளையம் சாலை, காலனி மருத்துவமனை அருகில் இருந்து தி.மு.க. அலுவலகம் வழியாக செடி, கொடிகள் அடர்ந்து இருந்ததை அகற்ற கேட்டுக்கொண்டபடி, பொக்லின் மூலம் அவைகள் அகற்றப்பட்டன.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu