பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மே தின விழா

பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மே தின விழா
X
பள்ளிபாளையம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மே தின விழா கொண்டாட்டங்கள், கொடியேற்று விழா நடைபெற்றது.

மே 1 உலக தொழிலாளர் தினமான கடைபிடிக்கிறது. உழைக்கும் தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில், இந்த நாளில் மே தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.

மே தின விழா கொண்டாட்டங்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் தலைமை தாங்கி, கொடியினை ஏற்றி வைத்து, தொழிலாளர் தினத்தின் சிறப்புகளைப் பற்றி எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த கட்சி கிளை நிர்வாகிகள் சந்திரசேகர், செந்தில், சண்முகம், அங்கமுத்து மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!