குமாரபாளையம் நகராட்சி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மாஸ் கிளீனிங்

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மாஸ் கிளீனிங்
X

குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மாஸ் கிளீனிங் பணி செய்தனர்.

குமாரபாளையத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மாஸ் கிளீனிங் பணி செய்தனர்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் எனும் தமிழக அரசின் திட்டம் சார்பில் குமாரபாளையத்தில் சில நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 33 வார்டு பகுதியிலும் மாஸ் கிளீன் செய்யப்பட்டு வருகிறது. நேற்று கோம்பு பள்ளம் தூய்மை செய்யப்பட்டது. ஜி.ஹெச். எதிரில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டது.

கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் மேம்பாலம் கீழ் பகுதியில் சுவற்றில் உள்ள சினிமா போஸ்டர்கள் அகற்றப்பட்டன. பிளாஸ்டிக் ஒழிக்கும் வகையில் பொதுமக்களுக்கு சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஒ. ராமமூர்த்தி, எஸ்.ஐ. க்கள் செல்வராஜ் பங்கேற்று, பொதுமக்களுக்கு மஞ்சள் பைகள் வினியோகம் செய்தனர்.

இதுபற்றி சேர்மன் விஜய்கண்ணன், கமிஷனர் விஜயகுமார் கூறும்போது குமாரபாளையம் நகராட்சியில் 100 சதவீதம் குப்பைகள் இல்லாத நகராட்சியாக மாற்ற தீவிர தூய்மை பணி செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வார்டுகளிலும் தொற்று நோய் பரவாதிருக்க கிருமிநாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து, தொற்று நோய் பரவாதிருக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!