சித்தாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: மார்ச்சிஸ்ட் கோரிக்கை

சித்தாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: மார்ச்சிஸ்ட் கோரிக்கை
X
சித்தாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பவானியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11-வது மாநாடு, நிர்வாகிகள் சின்னசாமி, தமிழ்செல்வன், மோகனா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பவானி நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற வேண்டும். கேசரிமங்கலம் ஊராட்சி, சித்தாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

பவானி ஒன்றியம், புன்னம் ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் பவானி வட்டாரச் செயலாளராக எஸ்.மாணிக்கம் தலைமையிலான நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.பழனிசாமி, எஸ்.முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!