குமாரபாளையத்தில் மருது பாண்டியர் குருபூஜை விழா

குமாரபாளையத்தில் மருது பாண்டியர் குருபூஜை விழா
X

குமாரபாளையத்தில்,  மருது பாண்டியர்கள் நினைவு நாள் குருபூஜை நடைபெற்றது.

குமாரபாளையத்தில், விடியல் ஆரம்பம் சார்பில், மருது பாண்டியர்கள் குருபூஜை நடைபெற்றது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் அமைப்பின் சார்பில், மருது பாண்டியர்களின் 220வது குருபூஜை விழா நடைபெற்றது. அமைப்பாளர் பிரகாஷ், முன்னாள் தலைமை ஆசிரியை பங்கஜம் தலைமையில், இவ்விழா நடைபெற்றது. மருது பாண்டியர்களின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி மற்றும் தீபாராதனை செலுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மருது பாண்டிய மன்னர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து பேச்சு, கட்டுரை, போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசாக புத்தகங்களை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எஸ்.ஐ. மலர்விழி வழங்கினார். அகமுடையார் சங்க நிர்வாகிகள் உமாராணி, குமாரசாமி, தளபதி லயன்ஸ் சங்க தலைவர் சண்முகசுந்தரம், இசை அமைப்பாளர் மணி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story