குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் அமைப்பு குழுவினர் ஆலோசனை

குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் அமைப்பு குழுவினர் ஆலோசனை
X

குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் அமைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் அமைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் அமைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மொழிப்போர் போராட்டத்தின் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த தியாகிகளின் நினைவாக நினைவுத்தூண் அமைக்க ஆலோசனை குழு ஏற்படுத்தப்பட்டது. அந்த குழுவின் ஆலோசனை கூட்டம் தலைவர் மல்லை ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

நினைவு தூண் அமைக்க இடம் தேர்வு செய்தல், அதற்கான அரசு அனுமதி பெறுதல், தியாகிகளின் குடும்பத்தாருக்கு அரசு உதவி கிடைக்க அரசிடம் கோரிக்கை விடுத்தல், இன்றைய சமுதாயத்தினருக்கு மொழிப்பற்று ஏற்படுத்திட விழிப்புணர்வு நிகழ்சிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவர்களிடையே பிரச்சாரம் செய்தல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் அன்பழகன், பகலவன், செல்வராஜ், ஆறுமுகம், விடியல் பிரகாஷ், பாண்டியன் புவனேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story