குமாரபாளையத்தில் நாளை மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் திறப்பு விழா

குமாரபாளையத்தில் நாளை  மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் திறப்பு விழா
X

மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண். 

குமாரபாளையத்தில் நாளை (ஜன. 25ம் தேதி) மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் திறப்பு விழா நடைபெற உள்ளது.

குமாரபாளையத்தில் ஜன. 25ல் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் திறப்பு விழா துணை செயலர் ரவி தலைமையில் நடைபெற உள்ளது. மொழிப்போர் தியாகி வடிவேல் நினைவுத்தூணை திறந்து வைக்க உள்ளார்.

இதையடுத்து ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் தலைவர் ராமநாதன் தலைமை வகிக்க, பி.யூ.சி.எல். தமிழ்நாடு, புதுவை தலைவர் குறிஞ்சி, எழுத்தாளர் பாலமுருகன், மூத்த வக்கீல் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசவுள்ளனர். 1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் குமாரபாளையத்தில் 15 பேர் பலியாகினர். இவர்களது நினைவாக இந்த நினைவுத்தூண் அமைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அமைப்புக்குழுவினர் பகலவன், ஆறுமுகம், அன்பழகன், விடியல் பிரகாஷ், சரவணன், செல்வராசு, பாண்டியன், கதிரவன், புவனேஸ்வரன், சாமிநாதன் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!