மாரியம்மன் கோவில் சப்பாரம் நிறுத்தும் இடம், மடப்பள்ளிக்கு கணபதி யாக பூஜை

மாரியம்மன் கோவில் சப்பாரம் நிறுத்தும் இடம்,  மடப்பள்ளிக்கு கணபதி யாக பூஜை
X

குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் சப்பாரம் நிறுத்தும் இடம், மடப்பள்ளிக்கு கணபதி யாக பூஜை நடத்தப்பட்டதுடன், இதனை கட்டிக்கொடுத்த விஜய்கண்ணனுக்கும், அவரது மனைவி தேவிகாவிற்கும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பு மரியாதை செய்தனர்.

குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் சப்பாரம் நிறுத்தும் இடம், மடப்பள்ளிக்கு கணபதி யாக பூஜை நடத்தப்பட்டது.

குமாரபாளையம் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கோவிலுக்கு புதிய சப்பாரம் நிறுத்தும் இடம் மற்றும் மடப்பள்ளி 8 லட்சம் ரூபாய் செலவில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் அமைத்து கொடுத்தார்.

இதற்காக கோவிலில் கணபதி யாக பூஜை நடத்தபட்டது. கோவில் நிர்வாகத்தினர் நாட்டான்மைக்காரர் முருகேசன் தலைமையில் விஜய்கண்ணனுக்கும், அவரது மனைவி தேவிகாவிற்கும் சிறப்பு மரியாதை செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!