புளியம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்

புளியம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்
X

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பவனி வந்த அம்மன்.  

குமாரபாளையத்தில் புளியம்பட்டி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே புளியம்பட்டி மாரியம்மன் திருவிழா, மார்ச் 29ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன் தினம் காவிரி ஆற்றில் இருந்து, மேளதாளங்கள் முழங்க, மஞ்சள் ஆடை கட்டி பெண்கள் தீர்தக்குடங்கள் எடுத்து வந்தனர்.

பின்னர், வண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரததத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மாரியம்மன் அருள்பாலித்தவாறு வந்தார். நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி