மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பு வழிபாடு

மாரியம்மன் கோவில் திருவிழா   சிறப்பு வழிபாடு
X
குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

மாரியம்மன் கோவில் திருவிழா

சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா ஏப். 22ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஏப். 28ல் கம்பம் நடப்பட்டது. மே. 3ல், பூவோடு ஏற்றுதல், மே 7ல் பூவோடு இறக்குதல், காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம், அம்மன் சர்வ அலங்காரத்துடன் திருவீதி உலா, மே. 8ல் பொங்கல் வைத்தல், சக்தி அழைத்தல், அலகு குத்துதல், மாவிளக்கு ஊர்வலம், கிடா வெட்டுதல், கம்பம் பிடுங்கி சுவாமி கிணற்றில் விடுதல், வாணவேடிக்கை நடைபெறவுள்ளது. மே. 9ல் மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, மே.10ல் மறு பூஜை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள். தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்து வருகிறது. இதில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

படவிளக்கம் :

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Next Story