மாரியம்மன், ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன், ஓங்காளியம்மன் கோவில்   கும்பாபிஷேக விழா
X

குமாரபாளையம் அருகே கத்தேரி, சாமியம்பாளையம் அருந்ததியர் தெரு விநாயகர், முத்துமாரியம்மன், ஓங்காளியம்மன், சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே உள்ள மாரியம்மன், ஓங்காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அருகே கத்தேரி, சாமியம்பாளையம் அருந்ததியர் தெரு விநாயகர், முத்துமாரியம்மன், ஓங்காளியம்மன், சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பிப்5 ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. காவேரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். பிப். 6 காலை 06:30 மணிக்கு தீபம் ஏற்றுதல், புன்யாகவாசனம், காலை 09:00 கோபுர கலசங்கள் ஸ்தாபிதம் செய்தல், மாலை 06:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

பிப்.7 காலை 05:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 08:40 மணிக்கு யாகசாலையில் இருந்து திருக்கலசங்கள் புறப்படுதலும், 09:10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் மகா கும்பாபிஷேக விழாவும் நடைபெற்றன. இதையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது .இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!