குமாரபாளையத்தில் மாரியம்மன் திருவிழா: தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையத்தில் மாரியம்மன் திருவிழா: தீர்த்தக்குட ஊர்வலம்
X

தீர்த்தக்குட ஊர்வலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரங்களுடன் அருள்பாலித்த காட்சி.

குள்ளநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, குள்ளநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று இரவு காவேரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரங்களுடன் அம்மன் அருள்பாலித்தவாறு வந்தார். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!