குமாரபாளையம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் மண்டல பூஜைகள் துவக்கம்

குமாரபாளையம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் மண்டல பூஜைகள் துவக்கம்
X

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் நூதன ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவில்.

குமாரபாளையம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் மண்டல பூஜைகள் துவங்கியது

குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகர், திருவள்ளுவர் நகர், வாசுகி நகரில் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தர்ராஜ பெருமாள் ஆலயத்தில் நூதன ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக சம்ப்ரோஷன விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. டிச. 20 விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தகுடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, டிச. 21 இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், கோபுர கலச பிரதிஷ்டை, மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் நான்காம் கால யாகசாலை பூஜை, யாக சாலையில் இருந்து கும்ப கலசங்கள் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேக விழா, 10:30 மணிக்கு மேல் ஸ்ரீபஞ்ச முக மகாவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 04:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து மண்டல பூஜைகள் நேற்று துவங்கியது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai ethics in healthcare