மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த மாவட்ட தி.மு.க. செயலர்

மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த மாவட்ட தி.மு.க. செயலர்
X

குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற தி.மு.க. சார்பில் நடைபெற்ற மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகளை மாவட்ட செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி தொடங்கி வைத்தார்.

குமாரபாளையம் அருகே தி.மு.க. சார்பில் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

மாவட்டம் தோறும் நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டியில் தேர்வான அணிகள், மண்டல அளவில் விளையாட தேர்வு செய்யப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள்.

குமாரபாளையம் தனியார் கல்லூரி மைதானத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி ஏற்பாட்டில், கொங்குமண்டல அளவில் அணிகள் கலந்துகொள்ளும் போட்டிகள் நேற்று துவங்கியது. போட்டியினை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு.மான மூர்த்தி துவக்கி வைத்தார்.

எக்ஸல் கல்லூரியின் துணைத்தலைவர் மதன்கார்த்தி, பள்ளிபாளையம் ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர் யுவராஜ், குமாரபாளையம் நகர கழக பொறுப்பாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், துணை அமைப்பாளர்கள் சுந்தர், செல்வம், கதிரவன் சேகர் ,சுரேஸ், ஜெயகோபி, பள்ளிபாளையம் நகர செயலாளர் ரவி, படைவீடு பேருர் பொறுப்பாளர் ராமமூர்த்தி, ஆலாம்பாளையம் கார்த்திக்ராஜ், மாணவரணி துணையமைப்பாளர் ரமேஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture