/* */

அரசு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் பிளெக்ஸ் பேனர் வைத்து அசத்தல்

குமாரபாளையத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் பிளெக்ஸ் பேனர் வைத்து அசத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அரசு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் பிளெக்ஸ் பேனர் வைத்து  அசத்தல்
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிளெக்ஸ் பேனர்கள்.

இதுகுறித்து குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு இளநிலை பாட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காண விண்ணப்பங்களை ஜூலை 7 வரை www.tngasa.in மற்றும் www.tngasa.org ஆகிய இணைய தள முகவரியில் பதிவு செய்யலாம். பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம், பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. விண்ணப்ப கட்டணம் 50.00 ரூபாய். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதிவு கட்டணம் 2:00 ரூபாய் மட்டும்.

கல்லூரி தொடர்பான தகவல்களுக்கு 04288-263121 என்ற தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் ஸ்மார்ட் போன், மடிகணினி மூலமாக விண்ணப்பிக்கலாம். இம்முறையில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் தங்கள் வீடு அருகில் உள்ள ஈ.சேவை மையங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் மாவட்ட சேவை மையங்களில் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் உடனே அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து, கல்லூரியில் செயல்பட்டு வரும் கல்லூரி சேர்க்கை உதவி மையத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேற்படி தகவல்கள் அடங்கிய பிளெக்ஸ் பேனர்களை நகரில் பல இடங்களில் வைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் தனியார் கல்லூரிகளுக்கு இணையாக அசத்தியுள்ளனர்.

Updated On: 4 July 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்