குமாரபாளையத்தில் திருடப்பட்ட டூவீலரை தாமாக முன்வந்து ஒப்படைத்தவர் கைது

குமாரபாளையத்தில் திருடப்பட்ட டூவீலரை தாமாக முன்வந்து ஒப்படைத்தவர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் திருடப்பட்ட டூவீலரை தாமாக முன்வந்து ஒப்படைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் வேல்முருகன், 40. காளான் கடை உரிமையாளர். இவர் தனது காளான் கடை முன்பு மே 19ம் தேதி மதியம் 12:00 மணியளவில் தனது அக்சஸ் டூவீலரை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரத்தில் வந்து பார்த்த போது டூவீலரை காணவில்லை.

இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். நேற்று காலை 11:30 மணியளவில் வாகனத்தை திருடியவர், வாகனத்தை திரும்ப ஒப்படைக்கும் எண்ணத்தில் காவேரி நகர் பகுதியில் வந்த போது, அதனை கண்ட வேல்முருகனின் நண்பர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் வாகனத்தை திருடியவர் முருகன், 52, என்பதும், குளத்துக்காடு பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து, திருடப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!